15 வயதில் திருமணம்! லட்சுமி ராமகிருஷ்ணனின் வாழ்கை பயணம்..!!

லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர் என பல துறைகளில் கலக்கி வருபவர். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் இவர் தொகுப்பாளராக இருக்க, பல குடும்பங்களில் நடக்கும் பிரச்னைகளை விவாதமாக எடுத்து பேசுவார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் 1970ஆம் ஆண்டு கேரளாவின் பாலகாட்டில் பிறந்தவர். இவருடைய அப்பா கிருஷ்ணசாமி இந்தியாவின் மிகப்பெரிய நூல் வியாபாரி. லட்சுமிக்கு அவரது 15 வயதில் ராமக்கிருஷ்ணனுடன் திருமணம் செய்து வைத்தார் அவரது அப்பா கிருஷ்ணசாமி.

இதனால் வேறு வழியின்று தனது கணவருடன் செல்ல வேண்டியதாயிற்று. அவருடைய கணவர் ராமகிருஷ்ணன் IITல் படித்து வெளிநாடுகளில் வேலை செய்து வந்தார். இதனால் தனது 15 வயதில் இருந்து 35 வயது வரை ஓமன் நாட்டில் தன் கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. 1985ஆம் ஆண்டு 2005ஆம் ஆண்டு வரை ஓமன் நாட்டில் இருந்து பின்னர் 2005ல் இந்தியா வந்தார் லட்சுமி. அதன்பின்னர் தனது மூன்று குழந்தைகளின் கல்விக்காக கணவருடன் கோயமுத்தூர் வந்து விட்டார்.

ஓமன் நாட்டில் இருந்தபோது அந்த நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். அங்குள்ள பெண்களின் திறமையை வளர்க்க ஒரு பவுண்டேசனை துவங்கி அவர்களுக்கு திறமையை வளர்க்கும் பல பயிற்சிகளை கொடுத்து வந்தார். இதனால் ஓமன் நாட்டின் விருதினையும் பெற்றுள்ளார்.

மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர் லோஹிததாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன் வீட்டினை தன் படத்திற்கான சூட்டிங்கிற்கும் கேட்டுள்ளனர். இதன் மூலம் திரையுலகில் அறிமுகம் கிடைத்த லட்சுமி. 2005ல் இருந்து 6 ஷார்ட் பிலிம்களை இயக்கியுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு யுத்தம் செய் என்ற படத்திலும் நடித்தார். அதன்பின்னர், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி என மூன்று படங்களை இயக்கினார்.

மேலும், பொய் சொல்லப்போறோம், எல்லாம் அவன் செயல், ஈரம், நாடோடிகள், வேட்டைக்காரன், விண்ணைத்தாண்டி வருவாயா, ஆண்மை தவறேல், ராவணன், நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன், யுத்தம் செய், ரௌத்திரம், லீலை, சென்னையில் ஒரு நாள் என பல தமிழ் படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*