ஜூன் மாதத்தில் தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன்-2ல் மீண்டும் ஓவியா மற்றும் பிரபல நடிகர்கள் வெளியாகிய தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் தற்போது படங்களில் கமிட்டாகி பிஸியாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் வரும் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

தற்போது இந்த சீசனில் கலந்து கொள்ள முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் ஜெயம் ரவிக்கு வலை வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவருமே தற்போது வரை தங்களது முடிவை அறிவிக்கவில்லையாம், இந்த சீசனில் மீண்டும் ஓவியா கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது, ஆனால் படங்களில் பிஸியாக இருப்பதால் 3 மாதங்கள் எப்படி ஷூட்டிங் செல்லாமல் இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் இரண்டாம் சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளாராம், முதல் சீசன் அவரின் அரசியல் பயணத்திற்கு அச்சாரமாக அமைந்தது போல இந்த சீசன் அவரது கட்சியை மக்களின் வீட்டிற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*