Home / சினிமா / அட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..? வெளியான ஆதாரம் இதோ

அட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..? வெளியான ஆதாரம் இதோ

விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்நிலையில் அட்லீ தன்னை தரக்குறைவாக நடத்தியதாக துணை நடிகை கிருஷ்ணதேவி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை சமீபத்தில் அளித்தார்.

ஆனால் இந்த புகார் திட்டமிட்டு அட்லீ மீது சுமத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கிருஷ்ணதேவி அளித்துள்ள புகாரில் அட்லீ உதவியாளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் அட்லீயும் என திருத்தி எழுதப்பட்டுள்ளது.

இந்த ஆதாரம் உண்மையில் கிருஷ்ணதேவி அளித்த புகார் தானா என்பதும் தெரியவில்லை. ஏனெனில் புகார் பற்றிய செய்திகள் நேற்று தான் வெளிவந்தன, ஆனால் இதில் ஏப்ரல் 16ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அட்லீ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *