Home / ஏனையவை / எடப்பாடி பழனிசாமி விளம்பரத்தில் நடித்த நடிகை மகாலட்சுமிக்கு ஏற்பட்ட சோகம்

எடப்பாடி பழனிசாமி விளம்பரத்தில் நடித்த நடிகை மகாலட்சுமிக்கு ஏற்பட்ட சோகம்

பல நாட்கள் ஸ்ட்ரைக் முடிந்து திரையரங்கம் சென்ற ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி விளம்பரம். இந்த விளம்பரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடவுளாக நினைத்து ஒரு பெண் அவருக்கு அர்ச்சனை செய்ய பெயர் கொடுக்கிறார். இந்த விளம்பரம் பலருக்கும் சிரிப்பை ஏற்படுத்தினாலும் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

இந்த விளம்பரத்தில் நடித்த நடிகை மகாலட்சுமி கூறும்போது, இந்த விளம்பரம் வந்த இரண்டு நாட்களாக நிறைய பேர் இதுபற்றி பேசிவிட்டார்கள். எப்படி நீங்கள் இதில் நடிக்க ஒப்புக் கொண்டீர்கள் என்று கேட்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நடப்பதையெல்லாம் பார்க்கிறீர்களே, உங்களுக்கு மனசாட்சி இல்லையா என கேட்கிறார்கள். அங்கு போன பிறகு தான் எனக்கு இப்படி ஒரு காட்சி இருக்கிறது என்றே தெரியும். எனக்கும் அந்த வசனத்தை கேட்ட போது எனக்கும் வருத்தமாக தான் இருந்தது.

நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு அதில் இருந்து விலகுவது சரியாக இருக்காது என்று தான் நடித்தேன் என தெரிவித்துள்ளார்.

About admin

Check Also

குருபெயர்ச்சி 2018 – 2019 : கோடி அதிஷ்டம் தேடி வரும் ராசி எது தெரியுமா?

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *