நடிகையாக சினிமாவில் நுழைந்து பின் பாடகியாக தன்னை அடையாளப்படுத்தியவர் நடிகை ஆண்ட்ரியா. நடுவில் நல்ல நல்ல படங்கள் எல்லாம் நடித்த அவர் சில காலம் சினிமா பக்கமே காணவில்லை.
சமீபத்தில் இதற்கு காரணம் திருமணமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும் அவரால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைகளை சந்தித்தேன் என்று கூறியிருந்தார்.
இதனால் பல தீவிர சிகிச்சைகளும் நான் செய்து கொண்டேன் என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
அது மட்டுமின்றி அவர் ஒரு அரசியல் வாரிசு நடிகர் என்றும். ஏமாற்றிய நடிகர் யார் என்பதை முறிந்த சிறகுகள் என்ற கவிதை புத்தகம் மூலம் அவரது பெயரையும் குறிப்பிட்டு வெளியிடுவதாக கூறியிருந்தார்.
அந்த அரசியல் வாரிசு நடிகர் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.