அச்சம் என்பது மடமையடா எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் நடிகை மஞ்சிமா மோகன், இவர் தொடர்ந்தும் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் . பல ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை மஞ்சிமா மோகன் விபத்தில் சிக்கி தற்போது ஓய்வு பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை நடைபெற்று ஒய்வில் இருப்பதாக மஞ்சிமா மோகன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன் ஓர் விபத்து நடந்ததாகவும், காலில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை பெற்று, ஒரு மாதத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.