Home / சினிமா / கிளாமர் கேர்ள் இமேஜை இழந்த ராய்லட்சுமி

கிளாமர் கேர்ள் இமேஜை இழந்த ராய்லட்சுமி

ராய்லட்சுமி நடித்துள்ள படம் சிண்டரல்லா. இதில் சாக்ஷி அகர்வால் வில்லியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ரோபோ சங்கர், கல்லூரி வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

காஞ்சனா 2 படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் லட்சுமி என்டிஆர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா உதவியாளர் வினோ வெங்கடேஷ் இயக்கி உள்ளார்.

இது ஒரு பேய்ப் படம் தான்ஆனால் அனைத்து அம்சங்களும் கலந்து ஒரு விறுவிறுப்பான படம் . ராய் லட்சுமி இப்படத்தில் அவரது கிளாமர் கேர்ள் இமேஜை இல்லாமல் நடித்துள்ளார் . சாக்ஷி அகர்வாலின் வில்லி கதாப்பாத்திரம் திரையில் பரபரப்புடன் இருக்கும்.

சிண்ட்ரெல்லா என்கிற பெயர் குழந்தைகளிடம் மிகவும் பரிச்சயமானது. இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது.பொழுது போக்கிற்கு நம்பிக்கை தரும் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *