விஜய்யின் பிகில் படம் வரும் 25ம் தேதி அதாவது மூன்று நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் இன்று வந்த தகவல் ரசிகர்களுக்கு பேர்இடியாக இருக்கின்றதாம் .அப்படி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய செய்தி என்ன ?
வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிறது என்றால் ஸ்பெஷல் ஷோக்களுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருப்பார்கள். விஜயின் படத்திற்கு இவ் எதிர்பார்ப்பு றொம்ப அதிகமாகவே இருக்கும் பிகில் படத்திற்கும் கண்டிப்பாக ஸ்பெஷல் ஷோ இருக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த வேளையில்
அமைச்சர் கடம்பூர் ராஜு பிகில் படத்திற்கு ஸ்பெஷல் ஷோக்கள் எதுவும் கிடையாது என அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.
ஸ்பெஷல் ஷோ இருக்கும் என நம்பிக்கையாக இருந்த ரசிகர்களுக்கு அவ்வளவுதானா, ஸ்பெஷல் ஷோ இல்லையா என்று பெரிய சோகத்தை கொடுத்துள்ளது.