சர்ச்சைகள் தான் மீரா மிதுனைத் துரத்துகிறதா இல்லை, மீரா மிதுன் தான் சர்ச்சைகளைத் துரத்துகிறாரா என்றே புரியாத நிலை தான் உள்ளது. இந்நிலையில் தனது மன உளைச்சலுக்கு மருந்தாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளாராம் நடிகை மீரா மிதுன்.
ஏனென்றால் ஆரம்பத்தில் அழகிப் போட்டியில் தில்லு முல்லு, அழகிப் போட்டி நடத்துவதாக மோசடி, அழகிப் பட்டம் பறிப்பு, போலீஸ் விசாரணை என மீரா மிதுனைப் பற்றி அடுத்தடுத்து பல புகார்கள் எழுந்தன.
பின்னர் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போனார். அங்கு அவர் நடந்து கொண்ட விதம் மேலும் விமர்சனத்திற்கு ஆளானது. தன்னை தக்கவைக்க சேரன் மீது பழி போட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்கள் அவரை வெளியேற்றி விட்டனர்.
அதிரடி டுவீட்கள், வீடியோ என தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது ஒன்றை செய்து வருகிறார் மீரா மிதுன் . கடந்த சில நாட்களுக்கு முன்னர், இனி தமிழ் படங்களிலேயே நடிக்கப் போவதில்லை என மும்பையில் இருந்தபடி வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.
தன்னை நன்கு புரிந்து கொண்ட தன் நீண்ட கால நண்பரைத் தான் அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.