உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இதய நோய்கள் காரணமாக உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பார்வைத்திறனை இழப்பதாக உலக மருத்துவ கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஒரு சிறந்த உணவுப் பொருளாக மீன் எண்ணெய் மாத்திரை இருக்கிறது. இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ சத்து கண்களில் ஏற்படும் திசு வளர்ச்சி குறைவு மற்றும் செல்களின் வீக்கத்தைக் கட்டுப்படுத்தி, கண்பார்வையை காக்கிறது.
மேலும் கண் நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கண் அழுத்த நோய் ஏற்பட்டு பார்வை மங்குதல் குறைபாட்டையும் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டு வருவதால் நீக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.