Home / சினிமா / ஆம்புலன்ஸ் தாமதமானதால் பிரசவத்தின் பின் உயிரை இழந்த நடிகை

ஆம்புலன்ஸ் தாமதமானதால் பிரசவத்தின் பின் உயிரை இழந்த நடிகை

மகாராஷ்டிராவின் ஹுங்கொளி என்ற இடத்தில் வசித்து வந்த பிரபல மராத்தி நடிகை பூஜா சஞ்சார்க்கு கடந்த அக்டோபர் 20ம் தேதி நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அருகில் Goregaon என்ற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலயத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தை இறந்துவிட்டது.

அதன் பிறகு நடிகையின் நிலையும் மிக மோசமடைந்துள்ளது. இந்நிலையில் அவரது நிலைமையை கருத்தில் கொண்டு நடிகையை Hingoli civil hospital கொண்டுசெல்லுமாறு கூறியுள்ளனர்.

ஆனால் அது 40 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது. காலதாமதமாக ஒரு தனியார் ஆம்புலன்ஸில் அவரை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நடிகை உயிரிழந்துள்ளார்.

ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் medico-legal கேஸ் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *