Home / சினிமா / ” பாகுபலி ” ராணா இப்படிப்பட்டவரா ?

” பாகுபலி ” ராணா இப்படிப்பட்டவரா ?

” பாகுபலி ” படத்தில் வில்லனாகவந்து எல்லோரையும் மிரட்டியவர்தான் ராணா டகுபட்டி. இவரை பற்றி கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவருக்கு உடல் நலக் குறைவு என்றும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றார் என்றும் செய்திகள் வெளியாகின.

அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி வந்து பின்னர், கடந்த வாரம் லண்டன் சென்று ‘பாகுபலி’ இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கடந்த சில நாட்களாக ராணா டகுபட்டி நடிக்க இருந்த ‘ஹிரண்ய கசிபு’ படத்திலிருந்து விலகிவிட்டார் என்று சொன்னார்கள். இப்படி தன்னைப் பற்றிய தொடர் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராணா ஒரு டுவீட் போட்டுள்ளார்.

அதில், “என்னைப் பற்றி என்றால், நான் எதுவும் டுவீட் செய்யவில்லை என்றால், அது எதுவும் உண்மையில்லை” என பதிலடி கொடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *