Home / பிக் பாஸ் / முதலில் எனக்கென்று சில கடமைகள் உள்ளன, லொஸ்லியா அடுத்தபடிதான் : மனம்திறந்தார் கவின்

முதலில் எனக்கென்று சில கடமைகள் உள்ளன, லொஸ்லியா அடுத்தபடிதான் : மனம்திறந்தார் கவின்

நடந்துமுடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்மக்களிடையே பெரும்வரவேற்பை பெற்றது .இந்நிகழ்வில் சண்டைக்கு மட்டுமல்ல காதலுக்கும் குறைவில்லை எனலாம் .இதில் பதினாரு போட்டியாளர்களில் கவினும், லாஸ்லியாவும் கலந்துகொண்டனர்

இதில், லாஸ்லியா இறுதிப் போட்டி வரை வந்தார். ஆனால், அவரால் மூன்றாவது இடத்தைத்தான் பெற முடிந்தது. ஆனால் இறுதிவரை பேசப்பட்டது கவின் – லொஸ்லியா காதல் கதைதான்

நிகழ்ச்சி முடிவதற்குள், இருவரும் தங்கள் காதலை ஓபனாக தெரிவித்து, ஒன்று சேருவர் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், அப்படி நடக்கவில்லை. இருந்தபோதும், நிகழ்ச்சி முடிந்த பின், இருவரும் வெளியே வந்து, தங்களுடைய காதலை ஓபனாகச் சொல்லி, திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்வர் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதுவும் இல்லை. இதற்கிடையில், போட்டியாளர்களில் ஒருவர் மற்றொருவர் வீட்டுக்குச் சென்று பொழுதைக் கழிப்பது என நடந்து கொண்டனர். அந்த நிகழ்விலும், இருவரும் சந்திக்கவில்லை. அந்த இடத்திலையே இவர்கள் காதல் முடிந்தகதையா ?

ஆனால், பிக்பாஸ் கொண்டாட்டம் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கவினும், லாஸ்லியாலும் கலந்து கொண்டு நடனமெல்லாம் ஆடி இருக்கின்றனர். வேஷ்டி – சட்டையில் கவின் நிகழ்ச்சிக்கு வர, மார்டன் உடையில் லாஸ்லியா வந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் போது, கவினிடம் லாஸ்லியாவின் காதலைச் சொல்லி, இருவருக்கும் திருமணம் எப்போது என சிலர் கேட்டு இருக்கின்றனர்.

அதற்கு பதில் அளித்த கவின், “இப்போதைக்கு காதலைப் பற்றி நான் யோசித்துக் கூட பார்க்கவில்லை; அதற்குள், திருமணத்துக்கெல்லாம் போய் விட்டீர்கள். முதலில் எனக்கென்று சில கடமைகள் உள்ளன. அதையெல்லாம், நான் வெற்றிகரமாக முடிக்க வேண்டும். அதன்பிந்தான், காதல்-கல்யாணம் குறித்தெல்லாம் யோசிக்க வேண்டும்” என சொல்லியிருக்கிறார்.

ஆனால், தனக்கு இது குறித்து எதுவுமே தெரியாது என இலங்கைக்குச் செல்லும் முன் லாஸ்லியா கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *