Home / சினிமா / நான் கவர்ச்சியாக இருப்பேன்; நடிப்பேன் : ப்ரியா வாரியர் ஓபன் டோக்

நான் கவர்ச்சியாக இருப்பேன்; நடிப்பேன் : ப்ரியா வாரியர் ஓபன் டோக்

மலையாளத்தில் வெளியான அடார் லவ் படம் பெரிய அளவில் வசூலை அள்ளிக் குவிக்கவில்லை என்றாலும், படத்தில் நடித்த ப்ரியா வாரியருக்கு மிகப் பெரிய அளவில் புகழ் வெளிச்சத்தை கொட்டியது.

மாணிக்க மலராய பூவி என, அடார் லவ் படத்தில் வரும் பாடலில், பள்ளி மாணவியாக நடித்திருக்கும் ப்ரியா வாரியர், தன்னுடைய புருவங்களை வளைத்தும், முக பாவனைகள் மூலமாகவும் காதல் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்த, அது, உலக அளவில் சட்டென பரவி, ப்ரியா வாரியருக்கு உலக அளவில் ரசிகர்கள் வட்டத்தைத் தோற்றுவித்தது.

இந்த ஒரு படத்தில் நடித்ததன் மூலம், அவருக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து, தற்போது, அவர் இந்திப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். விளம்பரப் படங்களிலும் நடித்து வரும் அவருக்கு, கை நிறைய பணமும் கிடைக்கிறது.

இந்நிலையில், வாய்ப்பு இல்லாத நடிகைகள் போல, அவரும் நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.

இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது: நடிகை என்றால், ஒரே மாதிரியாகவே சினிமாவையும், சொந்த வாழ்க்கையையும் கொண்டு செல்லக் கூடாது. எப்போது, உங்களுக்கென தனித்த ரசிகர்கள் உருவாகி விட்டனரோ, அவர்கள் ரசிக்கும்படியாக நடந்து கொள்ள வேண்டும். அதற்காகவேதான், கொஞ்சம் கவர்ச்சியாக நீச்சல் உடையில் படங்களை எடுத்து வெளியிட்டேன். மற்றபடி, கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நான் கவர்ச்சியாக இருப்பேன்; நடிப்பேன். தவிர, ஒரு போதும் ஆபாச எல்லைக்குள் நுழைய மாட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *