தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படம் நேற்றையதினம் அதாவது 25ஆம் திகதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங்கில் மீண்டும் ஒரு படமாக அமைந்துள்ளது.
அந்த வகையில் பிகில் உலகம் முழுவதும் ரூ 65 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
சர்கார் படம் முதல் நாள் ரூ 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது, ஆனால், பிகிலுடன் கைதி வந்ததால், இப்படத்தின் வசூல் கொஞ்சம் குறைந்துள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
மேலும் இப்படம் முதல்நாள் 65 கோடி என்றாலும் இனிவரும் நாட்களிலும் வசூல் சாதனை செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது .