Home / சினிமா / ஆக்ஷன் அவதாரத்தில் கலக்கும் நந்திதா ஸ்வேதா

ஆக்ஷன் அவதாரத்தில் கலக்கும் நந்திதா ஸ்வேதா

பெண்களின் வாழ்வை மையப்படுத்திய கதைகள் தமிழ் சினிமாவில் இப்போது அதிகமாக வர துவங்கியுள்ளது. அந்த வரிசையில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் ஐ.பி.சி 376 என்ற ஆக்ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இந்தப் படத்தை சண்டை இயக்குனர் ராம்குமார் சுப்பாராயன் இயக்குகிறார்.

இப்படம்குறித்து அவர் கூறுகையில் அட்டக்கத்தி படத்தில் இருந்தே தனது நடிப்பால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ரசிகர்களிடையே பிடித்துள்ள நந்திதா ஸ்வேதா, இதில் நாயகியாக நடித்து வருகிறார். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளது. பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார். சண்டை காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார்.

விஜயசாந்திக்குப் பிறகு சண்டைக்காட்சிகளில் அசாத்தியமாக நடித்திருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா தான் என்று உறுதியாக சொல்வேன். படத்தின் தலைப்பில் உள்ள ஐ.பி.சி 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. என்கிறார் ராம்குமார் சுப்பாராயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *