பிக்பாஸில் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து புகழின் உச்சத்திற்கு சென்றவர் சுஜா வருணி. சண்டை சண்டையாக இருந்தாலும் தனது திறமையை உலகறிய செய்தவர்தான் இவர் .
இவரும் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்கிற சிவக்குமாரும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு Adhvaaith என்று பெயர் சூட்டிய இவர்கள் குழந்தையுடன் மிக மகிழ்வாக பொழுதை கழித்து வருகின்றனர்
Happy Deepavali to all💥
I feel so blessed because it’s my first deepavali being celebrated with my Husband @Shivakumarr222 and my Son #adhvaaith I wish all to celebrate this diwali safely, Happily. I wish my son shall always be surrounded by your blessings😊 #thaladiwali pic.twitter.com/CNpgl6PNPr— SujaVaruneeShivakumar (@sujavarunee) October 27, 2019
நேற்றைய தினம் தீபாவளி என்பதால் கணவருடன் தனது குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு சுஜா வருணி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதிலாவது குழந்தையின் முகத்தினை அவதானிக்கலாம் என்று நினைத்த ரசிகர்களை சுஜாவருணி ஏமாற்றியுள்ளார். ஏனெனில் அவர் தனது குழந்தையின் முகத்தில் மட்டும் எமோஜியினை வைத்து மறைத்துள்ளார்.