Home / சினிமா / அப்பாவை பார்த்து கற்றுக்கொள் : மிரட்டிய நடிகர் விஜய்சேதுபதி

அப்பாவை பார்த்து கற்றுக்கொள் : மிரட்டிய நடிகர் விஜய்சேதுபதி

காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு ஹீரோவாக நடிக்கும் படம் ” அல்டி “. மனீஷாஜித் ஹீரோயினாக நடிக்க இப்படத்தை புதுமுகம் உசேன் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு விஜய் சேதுபதி மயில்சாமியின் மகனைப்பார்த்து அப்பாவிடம் கற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார் .

அண்மையில் வந்த நடிகர் விஜய்சேதுபதி என்றாலும் குறுக்கியகாலத்தில் பல வெற்றிகளை கொண்டவர்தான் நடிகர் விஜய் சேதுபதி . இதில் கலந்துகொண்ட அவர் மேலும் பேசியதாவது .

மயில்சாமியின் நடிப்பும், பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு காட்சியில் வந்தாலும் சரி, பல காட்சிகளில் வந்தாலும் சரி அவருக்கென்று ஒரு பாணி இருக்கும். அதேபோல் பேச்சிலும், நடிப்பிலும் தேவையில்லாமல் எதையும் செய்ய மாட்டார்.

மிகப்பெரிய ஜாம்பாவான்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். மயில்சாமியிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவருடைய அப்பாவித்தனத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அன்பு மயில்சாமியும் அவருடைய அப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. அதைக் கற்றுக் கொண்டு அன்பு மயில்சாமி வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துக்கூறினார் நடிகர் விஜய் சேதுபதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *