Home / சினிமா / அட்லியின் இடத்தை பிடித்த லோகேஷ்

அட்லியின் இடத்தை பிடித்த லோகேஷ்

‘தெறி’ படத்தின் மூலம் தான் விஜய், அட்லி கூட்டணி முதல் முறையாக 2013 இல் இணைந்தது. அதன்பின் 2017ல் ‘மெர்சல்’, 2019ல் ‘பிகில்’ போன்றபடங்களில் இக் கூட்டனி இணைந்தது . ‘தெறி’ படம் லாபகரமான படமாக அமைந்தாலும் ‘மெர்சல்’ படம் தயாரிப்பாளருக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் வெளியான ‘பிகில்’ படம் மூன்று நாட்களில் 100 கோடி வசூலைக் கொடுத்துள்ளது என்கிறார்கள். ஆனால், நிஜ நிலவரம் இந்த வார இறுதியில்தான் தெரிய வரும்.

இதனிடையே ‘கைதி’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 64வது படத்தை இயக்கி வருகிறார்.

‘கைதி’ படத்தின் வரவேற்பு பற்றி கேள்விப்பட்ட விஜய், லோகேஷ் கனகராஜைப் பாராட்டி இருக்கிறார். அதோடு 66வது படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுக்க முன் வந்துள்ளார் .

விஜய் நடித்த மூன்று படங்களை இயக்கி அவர் மனதில் இடம் பிடித்த அட்லியின் இடத்தை இப்போதே லோகேஷ் பிடித்துவிட்டார் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *