Home / சினிமா / ” விஜய் 64 ” இல் யாரும் எதிர்பாராத நடிகை , மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்

” விஜய் 64 ” இல் யாரும் எதிர்பாராத நடிகை , மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்

தீபாவளிக்கு ரிலீசான விஜயின் 63வது படம் ” பிகில் “. இந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் நடிக்கும் 64வது படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். பிகிலுடன்தான் இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் ” கைதி ” வெளியாகி வெற்றி கண்டது .

இந்நிலையில் இந்தப் படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லானாக நடிக்கிறார். சாந்தனு பாக்யராஜ், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் ஆகியோரும் படத்தில் நடிக்க, படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

கடந்த மூன்று வார காலமாக படபிடிப்பு விறுவிறுப்பாக நடக்க, மாளவிகா மோகனுக்கு அடுத்த நிலையில், ஒரு பெண் கேரக்டர் படத்தில் இருக்கிறது.

இந்த நடிகையை பலரும் இப்படத்தில் எதிர்பார்க்கின்றனர் . அந்தக் கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக் குழு. இரண்டாவது நாயகியாக நடிக்க, நடிகை ஆண்ட்ரியா யோசிப்பதால், உறுதி செய்யப்படாமல் இருக்கிறதாம். இவரின் நடிப்பும் திறமையும் யாரும் அறிந்ததே .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *