Home / சினிமா / விபத்தில் சிக்கி உரியிழந்த நடிகர் மனோ

விபத்தில் சிக்கி உரியிழந்த நடிகர் மனோ

இப்பொழுதெல்லாம் பிரபலங்களின் மரணம் என்பது சாதாரமாகிவிட்ட நிலையில் சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் நடிகர் மனோ உயிரிழந்துள்ளார் .

இவர் தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராகவும், மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. புழல் என்ற படத்தில் மூன்று நாயகன்களில் ஒருவராக அறிமுகமானார்.

மேலும் பல படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தார். தமிழ்நாடு முழுவதும் மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். இவர் நேற்று தனது மனைவி லிவியாவுடன் அம்பத்துாரில் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மனோ அதே இடத்தில் மரணமடைந்தார்.

பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அவரது மனைவியை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மனோவின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *