Home / பிக் பாஸ் / தந்தைக்காக கோவில் கட்டிய பிக்பாஸ் சரவணன் : விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்

தந்தைக்காக கோவில் கட்டிய பிக்பாஸ் சரவணன் : விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்

தந்தைமேல் எல்லா பிள்ளைகளுக்கும் பாசம் அதிகம்தான் , ஆனால் யாரும் அதை பெரிதாக வெளிக்கொணர்வது இல்லை . இந்நிலையில் பிக்பாஸ் 3 இல் கலந்துகொண்ட நடிகர் சரவணன் அவர்கள் தனது தந்தைக்காக கோவில் கட்டி வருகிறார்

பிக்பாஸ் 3வது சீசனில் பல விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டது. காதல் ,சண்டை இப்படி இருந்தது அதில் ஒன்று சரவணன் அவர்கள் போட்டியாளர்களுக்கு கூட தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறியது தான்.

அவருக்கே எதற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டோம் என்பது தெரியவில்லை என பேட்டியில் கூறியிருந்தார். காரணம் இல்லாமல் வெளியேறியது மனவருத்தத்தை தந்தது எனவும் தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் இவர் தனது அப்பா நினைவாக அவருக்கு கோவில் கட்டி வருகிறார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். தற்போது இன்று அவர் கட்டிய கோவிலின் திறப்பு விழா விமர்சையாக நடந்துள்ளது. இதில், பிக்பாஸ் பிரபலங்களான சாண்டி, தர்ஷன், ரித்விகா என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *