Home / சினிமா / குண்டம்மா என கூறி சர்ச்சசையில் சிக்கி, மன்னிப்பு கூறிய ” தளபதி விஜய் “

குண்டம்மா என கூறி சர்ச்சசையில் சிக்கி, மன்னிப்பு கூறிய ” தளபதி விஜய் “

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள படம் பிகில். இப்படத்தில் விளையாட்டை விறுவிறுப்பாக்க தளபதி விஜய் அவர்கள் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகளை குண்டம்மா என கூறி கலாய்த்துள்ளார் . பின் மன்னிப்பும் கூறியுள்ளார் .

இந்த படத்தில் நயன்தாரா நாயகியாகவும், இந்துஜா, அமிர்தா, ரெபோ மோனிகா, வர்ஷா, இந்திரஜா உள்பட பலர் கால்பந்தாட்ட வீராங்கணைகளாக நடித்தனர்.

இவர்களில் இந்திரஜா, காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் ஆவார். உடல் பருமனாக இருக்கும் அவரை இந்த படத்தில் ஒரு காட்சியில் குண்டம்மா என்று சொல்லி திட்டி உசுப்பேற்றுவார் விஜய். உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்த விஜய்க்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருக்கும் இன்றுவரை எந்த சங்கடமும் இல்லையாம் .

இந்த நிலையில், இந்திரஜா அளித்த ஒரு பேட்டியில், ‛‛என்னை குண்டம்மா என்று சொல்வதற்கு விஜய் தயங்கினார். படத்தின் காட்சிக்கு அது தேவைப்பட்டதால் அப்படி நடித்தார். நானும் எந்தவித சங்கடமும் இல்லாமல் இயல்பாகவே நடித்தேன். ஆன போதும், அந்த காட்சியில் நடித்த பிறகு அவர் என்னிடம் வந்து குண்டம்மா என்று சொல்லி நடித்ததற்கு மன்னிப்பு கேட்டார் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *