Home / சினிமா / விஜய்சேதுபதியின் அலுலகம் முன் முற்றுகை போராட்டம்

விஜய்சேதுபதியின் அலுலகம் முன் முற்றுகை போராட்டம்

சிலப்படங்களில் நடித்தாலும் எல்லோர் மனதிலும் நீங்க இடம்பிடித்தவர்தான் விஜய்சேதுபதி. இவர் தற்போது அதிகமான விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் துவங்க இருக்கும் ஒரு ஆன்லைன் மார்கெட்டிங் நிறுவன விளம்பரத்திலும் நடித்துள்ளார். அமேசான், பிளிப்காட் போன்று இது ஆன்லைனில் பலசரக்கு பொருளை விற்கும் நிறுவனம்.

இந்த விளம்பர படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதற்கு வியாபாரிகள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. “சின்ன சின்ன மளிகை கடைகளை அழிக்கும் இந்த ஆன்லைன் வர்த்தகத்திற்கு விஜய்சேதுபதி துணை போகலாமா?” என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன் அடுத்து கட்டமாக வருகிற 4ந் தேதி காலை 10 மணிக்கு வளரசவாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதியின் அலுலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஒரு பெரிய நிறுவனத்தால் பல சிறிய வியாபாரிகளின் வியாபாரம் காணாமல் போகும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *