Home / சினிமா / ‘குண்டம்மா’ காட்சிக்கு அதிக எதிர்ப்புகள் : படத்திலிருந்து நீங்க படக்குழு முடிவு

‘குண்டம்மா’ காட்சிக்கு அதிக எதிர்ப்புகள் : படத்திலிருந்து நீங்க படக்குழு முடிவு

தீபாவளியை முன்னிட்டு திரைக்கு அதிரடியாக விஜய் நடிப்பில் பிகில் ” கார்த்தி நடிப்பில் ” கைதி ” ஆகிய படங்கள் வெளியாகின . இந்நிலையில் ‘பிகில்’ படத்தில் ஒரு சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆனால், அது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் அதிகம் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர்.

இப்படம் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிப்பிலும் , அட்லி இயக்கத்திலும் இப்படம் உருவானது .

‘மெர்சல், சர்க்கார்’ படங்களில் அப்படி சர்ச்சை வந்த போது அது பற்றி பேசப் போய், அதுவே படத்திற்கு இலவச விளம்பரமாகி படத்திற்கு வசூல் அதிகரித்தது. அதனால், இந்த முறை ரசிகர்களைத் தவிர வேறு யாரும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இருந்தாலும் படத்தில் இடம் பெற்ற ‘சிஎம்’ என்று கேப்டன் மைக்கேல் என விஜய்யைச் சொல்லும் வசனம், குண்டான பெண் கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவரை ‘குண்டம்மா, குண்டம்மா’ என விஜய் கிண்டலடிக்கும் காட்சி, பிரமாண குடும்பத்தைக் காட்டிய விதம், ஆகியவற்றிற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவற்றில் ‘குண்டம்மா’ காட்சிக்கு அதிக எதிர்ப்புகள் வந்தன. அதனால், அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *