நடிகர் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் தற்போது தன்னை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கவைத்துள்ளது என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் பிரபலமாவதென்பது சாதாரண காரியம் அல்ல .அந்தவகையில் நான் சினிமாவில் நடிகராக திணறிய போது சினிமா தயாரிப்பாளராக மாறி டாப் ஹீரோக்களை வைத்து படம் எடுங்கள் என குடும்பத்தில் இருப்பவர்களே சொன்னார்கள். அதனால் நடிகர் விஜய்யை சந்தித்து பேச சொன்றேன்.
காரணம் நடிப்பை விட்டு தயாரிக்கும் நோக்குக்கே சென்றேன் அதனாலேயே விஜய் அவர்களை சந்திக்கச்சென்றேன் .
“ஏன் இப்படி ஒரு முடிவைஎடுக்கிறீர்கள். நல்லா நடிக்கிறீங்க, லவ்லி டான்சர், சண்டை போடுறீங்க. தொடர்ந்து செய்ங்க. நிறுத்திடாதீங்க” என கூறினார் விஜய். அவரது வீட்டில் இருந்து வெளியில் வந்து காரை நிறுத்தி ஒரு நிமிடம் யோசித்தேன்.
அவர் கொடுத்த confidence-1ஆல் நான் வீட்டுக்கு வந்து நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினேன்” என அருண் விஜய் தெரிவித்துள்ளார்.