Home / ஆரோக்கியம் / அதிக தொப்பையால் அவஸ்தையா : இதோ தொப்பையை குறைக்க டிப்ஸ்

அதிக தொப்பையால் அவஸ்தையா : இதோ தொப்பையை குறைக்க டிப்ஸ்

அடிவயிற்றிலோ அல்லது உடலின் மற்ற பாகங்களிலோ தங்கியிருக்கும் கெட்ட கொழுப்பினைக் குறைக்க நீங்கள் சரியான உணவுப் பழக்க வழக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சரியான உணவுவகைகளை நல்ல வாழ்க்கைமுறையுடன் கூடி உண்பதால் உங்களின் வளர்சிதைமாற்றம் (Metabolism) அதிகரித்து மிகவிரைவில் வயிற்றில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து தொப்பையைக் குறைத்து விடலாம்.

1) தண்ணீர்:

தாகத்திற்கு மட்டும் இரண்டு அல்லது மூன்று மடக்கு தண்ணீர் குடித்துவிட்டால் போது என்று நினைக்கிறோம். ஆனால் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தண்ணீர் ஒன்றே எரிபொருளாக இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகமாகிறது. ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது உடல் வறட்சியைச் தவிர்ப்பதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றி உடல் எடை குறைப்பிற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. எனவே தண்ணீர் அருந்துவதை சாதாரணமாக எடுத்துகொள்ள வேண்டாம். அதிலும் குறிப்பாகச் சித்தர்கள் “தமிழ் சித்த மருத்துவத்தில்” கூறியிருப்பது போல் செம்புபாத்திரத்தில் வைத்திருந்து குடிக்கும் தண்ணீரில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் தண்ணீரிலே கிடைத்துவிடும். மேலும் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

2) பூண்டு:

பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் மிக அதிகம். நல்ல கொழுப்பினை அதிகரித்து இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் பூண்டு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தினந்தோறும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைப்பில் மாற்றம் தெரியும். எனினும் வெறும் வயிற்றில் பாலில் வேக வைத்து எடுத்துச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் கிழ்வரும் எளிமையான‌ முறையைப் பின்பற்றலாம்.

ஒரு சிறிய அளவு கொள்கலனில் 10 முதல் 20 தோல் உறிக்கப்பட்ட‌ பூண்டுகளைப் போட்டு அவற்றில் கையால் எடுக்கப்பட்ட தேனை ஊற்றி ஊற வைக்க வேண்டும். 20 முதல் 40 நாட்கள் கழித்துப் பார்த்தால் அவை தேனில் நன்றாக ஊறியிருக்கும் அவற்றில் இரண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வர மிக விரைவில் உங்கள் இரத்ததில் உள்ள கெட்ட கொழுப்புகள் (கொலஸ்ட்ரால்) நீங்குவது மட்டுமல்லாமல் வயிற்றில் உள்ள தொப்பையையும் குறைக்க உதவுகிறது.

குறிப்பு:

எந்தக் காரணத்தைக் கொண்டும் பூண்டை பச்சையாக உண்ண வேண்டாம். பச்சையாக உண்டால் அதன் காரம் உங்கள் குடல் மற்றும் வயிற்றுப்பகுதியை புண்ணாக்கிவிடும். பூண்டைச் சாப்பிடும் முறை தெரியவில்லை எனில் உங்களுக்கு அருகில் உள்ள “தமிழ்ச் சித்த மருத்துவரை” அணுகவும்.

3) எலுமிச்சையும் அதன் சாறும்:

நமது உடல் நாள் முழுவதும் மிளிர்ப்புடனும், ஆற்றலுடன் இருக்க வேண்டுமென்றால் தினமும் ஒரு குவளை எலுமிச்சைச் சாறு அருந்துவது மிகவும் நல்ல பலனைத் தரும். தொப்பை குறைத்த பெண்அது மட்டுமல்லாமல் எலுமிச்சை நமக்குத் தெரியாகப் பல மருத்துவச் செயல்களை உடலில் நிகழ்த்துகிறது. நமது உடலில் உள்ள கெட்ட நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், வளர்சிதைமாற்றத்தைத் (Metabolism) தூண்டி உடல் வலுவுடன் இருக்கவும் எலுமிச்சை உதவுகிறது. வளர்சிதைமாற்றம் (Metabolism) அதிகரித்தாலே உடல் சுறுசுறுப்படந்து தேவையற்ற நச்சுப்பொருட்களை நீக்கித் தொப்பையைக் குறைக்க மிகவும் வழிவகுத்துவிடும்.

கீழ்வரும் முறையில் எலுமிச்சை மருத்துவத்தைத் தொடங்கி உங்களின் தொப்பையைக் குறைக்கலாம்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழம்: 6 முதல் 8 (தேவையான அளவு சாறாக்கிக் கொள்ளவும்)
தண்ணீர்: 7 முதல் 8 குவளைகள் (தேவையான அளவு)
தேன்: 1/2 குவளை அல்லது ஒரு குவளை
புதினா: 10 முதல் 12 இலைகள்.
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி இளம் சூட்டில் எலுமிச்சை சாறு, புதினா மற்றும் தேனைச் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் கிளர வேண்டும். பின்பு அதை இறக்கி அதன் சூடு போகும் வரை நன்றாகக் குளிர வைக்க வேண்டும். பின்னர் இதைக் குளிர் தானப் பெட்டியிலோ அல்லது மண்பானையிலோ (கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ள் வேண்டும்) வைத்திருந்து தினமும் ஒரு குவளை குடிந்து வர வேண்டும். அதாவது காலை உணவிற்கு முன்பாக ஒரு குவளையும் மாலையில் ஒரு குவளையும் குடித்து வர வேண்டும்.

இவற்றில் பனிக்கட்டிகளைப் போட்டுக் குடிக்கலாம். ஏனெனில் பனிக்கட்டிகளைப் போட்டுக் குடிக்கும் போது அவற்றின் குளிர்த்தன்மையை வெதுவெதுப்பாக்க உடல் மிக அதிகமான சக்தியைப் பயன்படுத்துவதாகத் தகவல். ஆனால் பனிக்கட்டிகளை உபயோகிக்கும் முறை சளித் தொல்லையுடன் இருப்பவர்களுக்குச் சரிவராது. அதற்குச் சரியான வழி, மண்பானையில் வைத்திருந்து எடுத்து அருந்துவது தான்.

இவ்வாறு 7 முதல் 10 நாட்களுக்குச் செய்து வர உடல் எடைக் குறைப்பில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

குறிப்பு:

இவை சாதாரணமாக வீட்டில் செய்யக்கூடிய முறை. இவற்றை முழுமையான மருத்துவ முறையாக எண்ண வேண்டாம். சரியான மருத்துவ முறைக்கு உங்கள் அருகாமையில் உள்ள சித்த மருத்துவரை அணுகவும்.

4) வெள்ளைச் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது:

வெள்ளைச் சர்க்கரை (Refined sugar) என்பது பல்வேறு வேதியல் கலவைகள் கலக்கப்பட்டு வெள்ளையாக்கப்பட்ட இனிப்புத் துகள் ஆகும். தற்போது சதுர வடிவில் முற்றிலுமாக வேதியல் கலவைகளைக் கொண்டு தாயரிக்கப்பட்ட சர்க்கரை வந்துவிட்டது. எவ்விதமான செயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட சர்க்கரைகள் அனைத்தும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது ஆகும். இந்தச் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் வேதியல் கலவைகள் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரைகள் இவையிரண்டையும் உணவில் சேர்க்கும்போது நமது உடலின் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிப்பதோடு தேவையற்ற நச்சுக்கள் உடலில் கலந்து நமது செரிமான உறுப்புகளைச் செதமாக்கி உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகிக்கிறது.

வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுச் சர்க்கரை, தேன், அதிமதுரச் சாறு மற்றும் பனங்கற்கண்டு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

5) அதிகப்படியான உப்பைத் தவிர்ப்பது நல்லது:

உப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இன்றய சமையலில் இருந்தாலும் அதை அளவோடுதான் சேர்க்க வேண்டும். அதிகமான உப்பு உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேற்றத்தைத் தடுப்பதால் உடலில் உள்ள கழிவுகள் சேர்ந்து உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. முடிந்த வரையிலும் இயற்கையாகக் கிடைக்கும் கல் உப்பினை உபயோகிப்பது மிகவும் நன்று.

6) மீன் உணவு:

அசைவப் பிரியர்கள் ஆடு மற்றும் கோழிக்கறிகளுக்குப் பதில் மீனை அதிகம் உணவில் சேர்த்து வந்தால் கெட்ட கொழுப்புகளுக்குப் பதில் உடலுக்குத் தேவையான‌ நல்ல கொழுப்புகள் கிடைக்கும். அனைத்து வகையான மீன்களிலும் ஒமேக 3 என்ற கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. இவை வயிற்றில் கெட்ட கொழுப்புகள் படிவதைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக டுனா, சாலமன் மற்றும் நமது கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கும் மீன்களில் இந்த ஒமேக 3 என்ற கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *