கொலம்பியா நாட்டை சேர்ந்த 17 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை தூங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கிளெயின் லெவின் என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகத்திலையே மொத்தம் 40 பேருக்குத்தான் இந்தநோய் உள்ளதாம் . இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கே தெரியாமல் தூங்கிவிடுவார்கள். தூங்க ஆரம்பித்தாள் இரண்டு மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து தூங்குவார்களாம்.
மேலும், தூக்கத்திலையே இருக்கும் இவர்களுக்கு பசி, தாகம் எதுவும் ஏற்படாதாம். ஆனால், சரியான நேரத்திற்கு சாப்பாடு கொடுக்காவிட்டால் உயிரே போய்விடுமாம். அதனால், இவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போதே உணவு திரவ வடிவில் வழங்கப்படுமாம்.