Home / சினிமா / அரசியல் களத்தில் நடிகை மீரா மிதுன்

அரசியல் களத்தில் நடிகை மீரா மிதுன்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கெடுத்த போட்டியாளர்கள் பதினாரு பேரில் நடிகை மீரா மிதுனும் ஒருவர். இப்பொழுது இவர் அரசியல் களத்தில் இறங்கி வெற்றிபெறுவதாக கூறியுள்ளார் .

அதாவது தமிழகத்தில் எனக்குப் பாதுகாப்பில்லை; அதனால், நான் வேறு மாநிலம் நோக்கி செல்லவிருக்கிறேன். எதிர்காலத்தில் அரசியலில் இறங்கி வெற்றி பெறுவேன் என நடிகை மீரா மிதுன் கூறியிருக்கிறார்.

அழகிப் போட்டி நடத்தப் போவதாகக் கூறி பலரிடம் இருந்து பணம் பெற்றார். ஆனால், சொன்னபடி அழகிப் போட்டிகளை நடத்தவில்லை. இதனால் இவர் மீது பலபுகார்கள் எழுந்தது , இன்றுவரை விசாரணைகள் நடந்தவண்ணமே உள்ளது .

இந்நிலையில், அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அங்கிருந்து வெளியே வந்து கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததற்காக, நிகழ்ச்சியை தயாரித்து, ஒளிபரப்பிய நிறுவனம் ஒரு பைசா காசு கூட கொடுக்கவில்லை. இது தொடர்பாக விஜய் டி.வி., நிறுவனத்துக்குச் சென்று கேட்டால், அங்கு பணம் குறித்து யாரும் தெளிவாக பதில் சொல்ல மறுக்கின்றனர். இது, ஏமாற்றாகத் தெரிகிறது. இதற்கிடையில், என்னைப் பற்றி தவறாக நிறைய விஷயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில், தமிழகத்தில் எனக்கு இருக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. வேறு மாநிலம் சென்றால்தான், பாதுகாப்பாக இருக்க முடியும். போலீஸார் பணத்தை வாங்கிக் கொண்டு என் மீது பொய்யான புகார்கள் மீது எப்.ஐ.ஆர்.., போடுகின்றனர். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறேன். ஆனால், எந்த கட்சியில் இணைந்து செயல்படுவேன் என, இப்போதைக்கு கூற முடியாது.என மீரா மிதுன் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *