நடிகர் தனுஷுடன் இணைந்து தொடர்ந்து பல வெற்றி படங்கள் கொடுத்து வருகிறார் இயக்குனர் வெற்றி மாறன். இவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை நேரில் சந்தித்துள்ளார் .
இவரின் வெற்றி படங்களை குறித்து அவர் அடுத்து எந்த நடிகருடன் இணைகிறார் என பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அது பற்றி பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானை அவர் சமீபத்தில் சந்தித்தார் என்று செய்திகள் வந்தது. அதை உறுதிசெய்யும் விதமாக தற்போது புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
கூடிய விரைவில் ஷாருக்-வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் வரும் என நாம் எதிர்பார்க்கலாம்.