அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் உருவான படம்தான் பிகில் . விஜயின் படங்கள் என்றாலே வசூல் பற்றி பேசவேதேவையில்லை . இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது விஜய்யின் நடிப்பு, விளையாட்டை மையப்படுத்திய கதைக்களம், ஏ.ஆர். ரகுமானின் இசை என அதிகமாக பேசப்படுகிறது.
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ரிலீஸிற்கு பின் ஒரு பேட்டியில் இன்றுவரை பிகில் தங்களுக்கு லாபமான படம் என்று கூறியிருந்தார்.
சரி 10 நாள் முடிவில் விஜய்யின் பிகில் படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.
சென்னை- ரூ. 10.79 கோடி
தமிழ்நாடு- ரூ. 117.4 கோடி
மொத்தமாக படம் 10 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 230 முதல் 240 கோடிக்குள் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பிகில் வசூல் வேட்டை தொடரும் .