Home / சினிமா / இன்றுவரை பேட்டிகொடுக்க தயங்கும் தல அஜித் : காரணம் என்ன தெரியுமா ?

இன்றுவரை பேட்டிகொடுக்க தயங்கும் தல அஜித் : காரணம் என்ன தெரியுமா ?

தமிழசினிமாவின் முன்னணி நடிகர்களில் தல அஜித்தும் ஒருவர் . இவர் பேட்டிகள் கொடுப்பதையே தவிர்த்துவருகின்றார் . தவறான விமர்சனங்களே தனது இந்த முடிவுக்கு காரணம் என கூறியுள்ளார் .

மற்ற நடிகர்களை போல இல்லாமல் நடிகர் அஜித் மீடியாவை சந்திப்பதையோ பேட்டி கொடுப்பதையோ நிறுத்திவிட்டார். அதற்கான காரணம் என்ன என்பதை விஜய் டிவி கோபிநாத்திடம் ஒருமுறை கூறினாராம் அஜித்.

“ஆரம்பத்தில் நடிக்க வந்தபோது எனக்கு தமிழ் சரியாக தெரியாது. பேட்டி கொடுக்கும்போது ‘தமிழ் நடிகருக்கு தமிழ் தெரியாதா?’ என விமர்சித்தார்கள். அதன் பிறகு ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தேன், ‘தமிழ் நடிகர்.. பெரிய இத்தாட்டம்.. இங்கிலிஷ்ல தான் பேசுவாரு!’ என்று விமர்சித்தார்கள்.

அதன் பிறகு பேட்டி கொடுப்பதையே தவிர்த்தேன். அதற்கும் ‘பேச கூட மாட்டேங்குறாரு.’ என விமர்சித்தார்கள்.

நான் எதார்த்தமாக பேசிய வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் இருந்தால் அதை வேறு விதமாக செய்தி போட செய்தார்கள். அதனால் தான் சைலண்டாக இருக்க ஆரம்பித்துவிட்டேன்” என அஜித் கூறினாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *