லேடி சூப்பர்ஸ்டார் என்றாலே நடிகை நயன்தாராதான் என குறிப்பிடும் அளவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இவர் தன் கேரியரில் மிகப்பெரிய தவறு செய்துள்ளதாக கூறியுள்ளார் .
இவர் டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், சோலோ ஹீரோயினாக படங்களில் நடித்தும் ஹிட் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் கேரியரில் செய்த தவறு பற்றி பேசியுள்ளார். முருகதாஸின் கஜினி படத்தில் நடித்தது தான் செய்த தவறு என கூறியுள்ள அவர், படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் காட்டப்பட்டிருந்த விதம் முருகதாஸ் தன்னிடம் சொன்ன கதையில் இருந்து அதிகம் மாறுபட்டிருந்தது” என கூறியுள்ளார்.
அதற்குப்பிறகு நான் கதைகள் மிக கவனமாக கேட்க ஆரம்பித்துவிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். கதை எவ்வாறு கேட்க்கின்றேனோ அதேபோல் என் கதாப்பாத்திரம் அமையவேண்டும் என கூறியுள்ளார் .