உத்தரப் பிரதேசத்தில் 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டிய நபர் ஒருவர் 42ஆவது முட்டை சாப்பிடும் போது உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுபாஷ் யாதவ் என்ற லாரி டிரைவர் பிபிகஞ்ச் மார்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் முட்டை சாப்பிடும்போது ஒருவர் எத்தனை முட்டைகளை சாப்பிடலாம் என்பது பற்றி விவாதம் எழுந்துள்ளது.
50 முட்டைகளை சாப்பிட்டுக்கொண்டே ஒரு பாட்டில் மது குடிக்க வேண்டும் எனப் பந்தயம் கட்டப்பட்டுள்ளது பந்தய தொகையாக 2 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு 250 ரூபாய் முன்பணமாக பெறப்பட்டுள்ளது.சாப்பிடத்தொடங்கிய அவர் 42-வது முட்டையை சாப்பிடும்போது அவர் மயக்கமடைந்து கீழே விழ அருகில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
உடனே அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.