Home / சினிமா / விஜய்சேதுபதியின் அலுவலகம் முற்றுகை

விஜய்சேதுபதியின் அலுவலகம் முற்றுகை

பிரபல நடிகர்கள் சிக்கலில் சிக்குவது இயல்புதான் இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, ஒரு ஆன்லைன் மார்கெட்டிங் நிறுவன விளம்பரத்தில் நடித்துள்ளார். அமேசான், பிளிப்காட் போன்று இது ஆன்லைனில் பலசரக்கு பொருளை விற்கும் நிறுவனம். இந்த விளம்பர படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதற்கு வியாபாரிகள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.

“சின்ன சின்ன மளிகை கடைகளை அழிக்கும் இந்த ஆன்லைன் வர்த்தகத்திற்கு விஜய்சேதுபதி துணை போவதாக கூறி விஜய்சேதுபதியின் அலுலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்று(நவ.,5) காலை சென்னை, ஆழ்வார் திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரவைகளை சேர்ந்த வணிகர்கள் 200 பேர் சாலையில் பேரணியாக கையில் பதாகைகள் ஏந்தி விஜய் சேதுபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு முற்றுகையிட சென்றனர்.

இதனை தடுத்து நிறுத்த அங்குவிரைந்த போலீசார் அவர்களை கைது செய்து போராட்டத்தை நிறுத்த முயற்ச்சி செய்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *