Home / சினிமா / விஸ்வாசம் 300-வது நாளை விசித்திரமாக கொண்டாடிய ரசிகை

விஸ்வாசம் 300-வது நாளை விசித்திரமாக கொண்டாடிய ரசிகை

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். சாதாரணமாகவே பெரிய நடிகர்களுக்கு பல ரசிகர்கள் இருப்பர் அதில் சிலர் விசித்திரமானவர்களும் கூட .

நேற்றுடன் 300-வது நாளில் வெற்றிகராமாக அடியெடுத்து வைத்தது தல அஜித்தின் விஸ்வாசம் .இதனை ஒரு பெண் ரசிகை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார் .

கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த படம் “நேர்கொண்ட பார்வை” ஆனால், ரசிகர்கள் இந்த படத்திற்கு முன்னர் வெளிவந்த விஸ்வாசம் படத்தை இன்னுமும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படம் வெளிவந்து நேற்றுடன் 300-வது நாளில் வெற்றிகராமாக அடியெடுத்து வைத்தது . இதனை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக அஜித்திற்கு இப்படியும் ஒரு பெண் ரசிகை இருக்கிறாரா என ஆச்சர்யப்படுமளவிற்கு அவரது ரசிகை ஒருவர், தனது கையில் அஜித் என்ற டாட்டூவும்..இன்னொரு கையில் சூடத்தை வைத்துக்கொண்டு விஸ்வாசம் புகைப்படத்திற்கு தீவார்த்தனை செய்கிறார்.

இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்ச்சர்யத்துடன் ட்விட்டரில் ஷேர் செய்து பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த ரசிகையின் வண்டியில் விஸ்வாசம் திருவிழா என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி விஸ்வாசம் வெற்றியை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

அவர்களுக்கு பிடித்த நடிகரின் படம் வெளிவந்தால் ரசிகர்கள் இவ்வாறு நடந்துகொள்வது வழக்கமாகி வருகின்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *