Home / சினிமா / மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் என்ற பட்டத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பெண் : புகைப்படம் இதோ

மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் என்ற பட்டத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பெண் : புகைப்படம் இதோ

மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் பங்கேற்று கோவையை சேர்ந்த சோனாலி பிரதீப் என்ற பெண் மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் என்ற பட்டத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

38 வயதான சோனாலி பிரதீப் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 2015, 2016 ஆம் ஆண்டுகளில் மிசஸ் கோயமுத்தூர் பட்டத்தையும் 2017 ஆம் ஆண்டு பூனேயில் நடைபெற்ற மிசஸ் இந்தியா தமிழ்நாடு என்ற அழகி போட்டியில் பங்கேற்று டைட்டில் பட்டத்தையும் வென்றுள்ளார்.

இந்த சூழலில் மொரீசியஸ் நாட்டில் கடந்த 12 ம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்ற மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் என்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் பங்கேற்ற அவர் அங்கு போட்டியாளர்களாக பங்கேற்ற 41 அழகிகளை எதிர் கொண்டு சிறப்புடன் செயலாற்றி மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

மனதைரியமும் ,அழகும் இணைந்து இவர் பல அழகி பட்டங்களை பெற்றுவருகின்றார் . தொடர்ந்து விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பேசும்போது இந்த பட்டம் வென்றது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.மிசஸ் யுனிவர்ஸ் எர்த் என்ற பட்டத்துடன் பியூட்டி வித் பர்பஸ் என்ற பட்டமும் கிடைத்துள்ளது என்றும் பெருமிதத்துடன் கூறினார். மேலும் தான் இப்படியான போட்டிகளில் பங்குபற்றுவதாகவும் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *