Home / செய்திகள் / பள்ளிமாணவியை பாழாக்கிய ஆசிரியரின் காதலன்

பள்ளிமாணவியை பாழாக்கிய ஆசிரியரின் காதலன்

பள்ளிப்பருவத்தில் காதலிப்பது என்பது வழமைதான் ஆனால் இங்கு நடந்ததை பார்த்தால் என்னவென்று சொல்லவது .தனது மாணவியை துஸ்பிரயோகம் செய்ய ஆசிரியரே உடந்தையாக இருந்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் சஞ்சனா இவர் ஒரு ஆசிரியர் . தனது வீட்டில் மாணவர்களுக்கு வகுப்பெடுத்துவருகின்றார் . இந்நிலையில் இவர் நீண்டநாட்களாக அப்பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

காலம்செல்ல இவர்களிடையே காதல் பேச்சு குறைந்துள்ளது .இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சஞ்சனா பாலாஜியிடம், நீ என்னிடம் பேச வேண்டுமென்றால் நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்க, உடனே பாலாஜி உன்னிடம் டியூசன் படிக்கும் மாணவிகளை எனக்கு விருந்தாக்க வேண்டுமென்று சற்றம் இரக்கமில்லாமல் கேட்க, சஞ்சனாவும் சரி என்று கூறியுள்ளார்.

மேலும் தனது மாணவி ஒருவரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு சஞ்சனா அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அவர்களுடன் பாலாஜியும் சென்றுள்ளார்.

அங்கு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாலாஜி, அதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சஞ்சனாவிடம் பயிலும் சில மாணவிகளை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இதுகுறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், உடனடியாக பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *