Home / சினிமா / மம்முட்டியால் முடியுமென்றால் என்னாலும் முடியும் : ரகுமான் தெரிவிப்பு ( புகைப்படம் உள்ளே )

மம்முட்டியால் முடியுமென்றால் என்னாலும் முடியும் : ரகுமான் தெரிவிப்பு ( புகைப்படம் உள்ளே )

என்றும் இளமை என்று கூறுமளவுக்கு இன்றும் இருந்துவரும் நடிகர்தான் ரகுமான் . அந்தவகையில் ரகுமான் உடற்பயிற்சி செய்யும் தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

90களில் இளம் கதாநாயகர்களாக வலம் வந்தவர்களில் இன்று ராம்கி, ரகுமான் என ஒரு சில குறிப்பிட்ட நடிகர்கள் தான் அதே அழகுடனும் கட்டுதலுடனும் வலம் வருகின்றனர்.இன்றும் அப்படியே இருப்பது சுலபமானது அல்ல அந்தவகையில் இதில் ரகுமான் தற்போதும் தமிழில் சில படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.. சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரகுமான்.

மேலும் அதுகுறித்து அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “என்னுடைய அன்பான மம்முட்டியாலே முடியும்போது, என்னாலும் முடியும்.. இதுதான் என்னுடைய தாரக மந்திரம்.. லவ் யூ இக்கா(மம்முட்டி)” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மம்முட்டிக்கு தற்போது 69 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் உடற்பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்துவதோடு உடம்பை பிட் ஆகவும் வைத்திருக்கிறார்.இளமையும் அவர் முகத்தில் களை கட்டுகின்றது . 52 வயதான ரகுமான் இதை குறிப்பிட்டுத்தான், தன்னாலும் முடியும் என கடின உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *