Home / சினிமா / மாமானுடன் மோத மருமகன் ரெடி : பொங்கலுக்கு டபிள் கொண்டாட்டம்

மாமானுடன் மோத மருமகன் ரெடி : பொங்கலுக்கு டபிள் கொண்டாட்டம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார். இந்த படத்தில் ரஜனி அவர்கள் மும்பை போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார் . இப் படத்தில் படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்பட பலர் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்த படத்துடன் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் மோத இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால் பொங்கலுக்கு முன்னராகவே அதாவது டிசம்பரிலேயே படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் படத்தை பொங்கலுக்கு வெளியிடும் வேலைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அதாவது வரும் பொங்கலுக்கு மாமனார் மற்றும் மருமகன் இருவரினதும் ஹிட் காத்திருக்கின்றது எனலாம் .

கடந்த பொங்கலுக்கு ரஜினி பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் மோதின. இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன. ஆக இந்த பொங்கலுக்கு மாமனார் உடன் மோத தயாராகி வருகிறார் தனுஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *