Home / சினிமா / ஆர்ஜே பாலாஜியுடன் இணையும் நடிகை நயன்தாரா

ஆர்ஜே பாலாஜியுடன் இணையும் நடிகை நயன்தாரா

நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் பாலாஜி, தற்போது நயன்தாரா படத்தின் நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை நயன்தாரா இப்பொழுதெல்லாம் எந்த கதையில் அவர் மையமாக இருக்கின்றாரோ அந்தப்படங்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்துவருகின்றார் ஆதலால்தான் குறிகிய காலத்திலே அவரின் வளர்ச்சி வேற லெவல் .

இந்த படத்திற்கு ’மூக்குத்தி அம்மன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், டைட்டிலை பார்த்ததும் இதுவொரு பக்தி படம் என்று எண்ண வேண்டாம் என்றும் இந்த படமும் ஒரு சமூக கருத்தை அழுத்தமாக கூறும் திரைப்படம் என்றும் ஆர் ஜே பாலாஜி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் படக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் அழுத்தமாக இருந்தா; நயன்தாரா இந்த படத்தில் நடிக்க சம்மதித்து விடுவார் என்றும், அதுவும் டைட்டில் வேடம் என்பதால் நயன்தாரா நிச்சயம் மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்றும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர். நடிகை நயன்தாராவின் நடிப்பிற்க்கே ரசிகர்கள் அதிகம் .ஆதலால் இவ்வாறு சமூக கருத்து படங்கள் இவரின் மூலமாக சமூகத்திற்கு விரைவாக செல்லும் என்பதே படக்குழுவின் நோக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *