Home / சினிமா / மீண்டும் காதலில் அமலாபால் : புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

மீண்டும் காதலில் அமலாபால் : புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

இயக்குநர் விஜய்யுடனான திருமணம் விவாகரத்தில் முடிந்த பிறகு மீ்ண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார் அமலாபால். தற்சமயம் நடிகை அமலாபாலின் காதலர் இவர் தான் என ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்தவர் இவர் .இப்பட பேட்டிகளில் தனது ஆண் நண்பர் பற்றி அவர் பேசியிருந்தார். ஆனால் தனது காதலர் யார் என்பது பற்றி அவர் மேலும் அவர் கூற மறுத்து விட்டார். இதனால் அமலாபாலின் காதலரைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் அமலாபாலின் காதலர் இவர் தான் என ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கருப்பு வெள்ளையில் இருக்கும் அப்புகைப்படத்தில் அமலாபாலின் அருகே அவர் நின்று கொண்டிருக்கிறார்.

அமலாபாலின் பிறந்தநாள் கொண்டாட்டம், இமயமலைப் பயணம் மற்றும் திருவண்ணாமலை பயணம் போன்றவற்றிலும் அவர் உடன் இருந்திருக்கிறார். இதனால் அவர் தான் அமலாபாலின் காதலர் என நெட்டிசன்கள் அப்புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். அமலாபால் உண்மையை கூறாமலே அவர் ரசிகர்கள் அவருக்கு காதலரை தேடிவருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *