Home / சினிமா / தற்காப்பு கலைகள் தெரிந்த, அதிரடி பெண்ணாக களமிறங்கும் நடிகை காஜல்

தற்காப்பு கலைகள் தெரிந்த, அதிரடி பெண்ணாக களமிறங்கும் நடிகை காஜல்

ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிக்கும் இந்தியன் – 2 படம் குறித்து, தினம் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. படத்தில், காஜல் அகர்வால், 85 வயது மூதாட்டியாக நடிக்கிறார் என்பது, அதில் ஒரு தகவல்.

நடிகை காஜல் அவர்களும் மிக திறமையாக நடித்துவரும் நடிகைகளில் ஒருவர் . இப்படத்தில் தனது நடிப்புக்குறித்து கூறுகையில் இந்தியன் – 2 படத்தில், தற்காப்பு கலைகள் தெரிந்த, அதிரடி பெண்ணாக நான் வருகிறேன். இதற்காக, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள் கற்கிறேன். என் கதாபாத்திரத்தின் வயது பற்றி வரும் வதந்திகள் குறித்து, தற்போது எதுவும் சொல்ல முடியாது,” என்றார்.

ஆக, காஜல் கதாபாத்திரம் குறித்த குழப்பம் தொடர்கிறது. இளமையோ, முதுமையோ அவர் நடிப்புக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *