Home / சினிமா / நடிகர் அதர்வாவால் எனக்கு 6 கோடி நஷ்டம் : மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர்

நடிகர் அதர்வாவால் எனக்கு 6 கோடி நஷ்டம் : மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர்

நடிகர் அதர்வா மீது பிரபல தயாரிப்பாளர் மதியழகன் என்பவர் மோசடி புகார் அளித்துள்ளார். 6 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தயாரிப்பளார் இந்த வழக்கை பதிவுசெய்துள்ளார் .அதர்வா தயாரித்து நடித்த செம போத ஆகாத படத்தினை வெளியிட்டவர் தான் மதியழகன். அவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது..

“செம போத ஆகாத படத்திற்காக ஐந்து கோடி ருபாய் நான் அதர்வாவுக்கு கொடுத்திருந்தேன். ஆனால் படம் சொன்ன தேதியில் சரியான நேரத்தில் ரிலீஸ் ஆகாததால் நஷ்டம் ஏற்பட்டது.”

“இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தபோது நடந்த கூட்டத்தில் அதர்வா எனக்கு ஒரு படம் நடித்துதரவேண்டும் என முடிவானது. ஆனால் அப்போது அதற்கு ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்கிய அவர் தற்போது வரை நடித்துதரவில்லை. அதனால் எனக்கு 6 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது, அதை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என அந்த புகார் மனுவில்கூறியுள்ளார்.

மேலும் நடிகர்கள் இப்படியான சிக்கல்களில் சிக்குவது குறைவு ஒரு நடிகர்களே இப்படியான காரியங்களை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *