Home / சினிமா / விஜயின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்

விஜயின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்

தளபதி 65 படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. விஜயின் படமென்றால் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்தான் . விஜய் பட நடிகை ,இயக்குனர் ,தயாரிப்பாளர் யார் என்பதிலே ரசிகர்கள் குறியாக இருப்பார்கள் .

இந்நிலையில் பிகில் படத்தின் வெற்றியை தொடர்து நடிகர் விஜய், மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இதனை அடுத்து விஜய்யின் 65வது படத்தை இயக்குவது யார் என்ற தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. ஆம், தடம் படத்தை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேணி விஜய்யின் 65வது படத்தை இயக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகத நிலையில் விஜய் ரசிகர்கள் #Thalapathy65 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். விஜயின் அப்டேட்டுக்கு ஒரு பெரும் கூட்டம் காத்திருக்கின்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *