நடிகர் வடிவேலு முன்னணி காமெடி நடிகராக வலம்வந்தவர். இவரின் காமெடிக்கு எல்லோருமே பெருமாதரவு எனலாம் . இந்நிலையில் தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் நடிகர் வடிவேல் .
அவர் 24ம் புலிகேசி படத்தில் இருந்து பாதியில் விலகியதால் பலகோடி நஷ்டம் என புகார் அளிக்கப்பட்டது. அதுபோல தற்போது பிரபல நடிகர் ஆர்கே தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புதிய புகார் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது ஆர்கே தயாரித்து நடிக்கவிருந்த நானும் நீயும் நடுவுல பேயும் என்ற படத்தில் முன்பணமாக 1 கோடி ரூபாயை பெறுக்கொண்டுள்ளார் நடிகர் வடிவேல் . பின்னர் அப்படத்தில் நடிக்கமருத்துள்ளார் இவர் அதனால் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டுள்ளார் ஆர்கே. அதையும் திருப்பி தராமல் உள்ளாராம் வடிவேலு.
தற்போது கமல் நடிப்பில் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கிறார் என செய்தி வந்தது. அதில் நடிக்கட்டும். ஆனால் 1 கோடியை திருப்பி கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவேன் என ஆர்கே புகாரில் தெரிவித்துள்ளார்.