Home / சினிமா / சிவாவின் ஹீரோ படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை

சிவாவின் ஹீரோ படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை

சிவகார்த்திகேயனின் படமென்றாலே பலருக்கு திருவிழாதான் .தற்சமயம் கடன் பிரச்னையால் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சிவகார்த்திகேயனை வைத்து ‛ரெமோ, வேலைக்காரன், சீமராஜா’ படங்களை தயாரித்தவர் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் ராஜா. அடுத்து மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனை வைத்து ‛ஹீரோ’ என்ற படத்தை எடுத்தார். இதற்காக டிஆர்எஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனத்திடம் ரூ.10 கோடி கடன் பெற்றிருக்கிறார்.

இதற்கான தொகையை வட்டியுடன் செலுத்துவதாக கூறியிருந்தார். ஆனால் சொன்னபடி பணத்தை தரவில்லை. மேலும் நிதி பிரச்னையால் ஹீரோ படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸிற்கு கைமாற்றிவிட்டார் ராஜா. இதனால் தனக்கு தர வேண்டிய படத்தை ராஜா தரும் வரை இப்படத்தை வெளியிடவோ, வேறு நிறுவனத்தில் வெளியிடவோ தடை விதிக்க வேண்டும் என டிஆர்எஸ் பிலிம்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று(நவ., 14) விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிமன்றம், ‛ஹீரோ’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து, வழக்கை டிச.,20க்கு தள்ளி வைத்தது. ஏற்கனவே பட தலைப்பிபல் சிக்கி உள்ள ஹீரோ படம், இப்போது நிதி பிரச்னையால் கோர்ட்டின் இடைக்கால தடையால் மேலும் சிக்கலை சந்தித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *