இந்தியாவின் ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் பான்யம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பாடசாலை ஒன்றில் சாம்பார் அண்டாவுக்குள் தவறி விழுந்து 6 வயது சிறுவன் மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று மதிய உணவு வேளையில், 6 வயதான புருசோத்தம் ரெட்டி கொதிக்கும் சாம்பார் அண்டாவில் தவறி விழுந்துள்ளார்.
உடனடியாக பாடசாலை நிர்வாகிகள், சிறுவனை மீட்டு அடுத்துள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ப்பித்துள்ளனர்.மருத்துவமனையில் வைத்து சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உணவுக்காக வரிசையில் நின்ற சிறார்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், சிறுவன் புசோத்தம் ரெட்டி முன்னால் இருந்த கொதிக்கும் சாம்பார் அண்டாவுக்குள் சென்று விழுந்துள்ளான்.
இச்சம்பவத்தை கண்டித்து சிறுவனின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பாடசாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலை நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் கண்காணிப்பு இல்லாததால் அவரது மகன் இறந்துவிட்டதாக ஷியாம்சுந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.