திரையில் காதல் மலர்வேதென்பது புதிதாய் பார்க்கும் விடயம் அல்ல . ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் காதலிக்கிறார்கள் என சமீப காலமாக கிசுகிசு அதிகம் வருகிறது. ஒருநாள் அஞ்சலியை பெயர் சொல்லி அழைத்ததர்க்க சண்டை போட்டுள்ளார் நடிகர் ஜெய் .
இவர்கள் ஜோடியாக ஒரு சில படங்களில் இணைந்துள்ளனர் . இவர்கள் நடித்த பலூன் படம் பெரிய பிளாப் ஆனது. அந்த படத்தினை தயாரித்தவர் போஸ்டர் நந்தகுமார் என்பவர். அவர் மெட்ராஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.
அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்த சமயத்தில் ஜெய் செய்த பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். அதனால் பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
ஒருமுறை இயக்குனர் சினிஷ் அஞ்சலியை பெயர் சொல்லி அழைத்துவிட்டாராம். அதை பார்த்த ஜெய்.. ‘மேடம் என்று தானே அழைக்கவேண்டும்’ என சண்டை போட்டுள்ளார். மேலும் அடுத்த நாளே ஜெய்-அஞ்சலி இருவரும் ஷூட்டிங் வராமல் கொடைக்கானலில் இருந்து யாருக்கும் சொல்லாமல் கிளம்பிவிட்டார்களாம்.
இவர்களுடைய இந்த செயலால் தான் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார் இயக்குனர் .