Home / சினிமா / நடிகை மீராமிதுனுக்கு இப்படி ஒரு பதவியா ?

நடிகை மீராமிதுனுக்கு இப்படி ஒரு பதவியா ?

கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் .இவர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார். இவர் தற்சமயம் அரசியலில் இணைந்துள்ளாராம் .

இவர் நடந்துமுடிந்த பிக்பாஸில் பங்கேற்று மக்களிடையே அவப்பெயரை சமபதித்தார் . இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மீரா மிதுன் சென்னை விட்டு வெளியேறி மும்பையில் வசித்து வருகிறாராம். மீரா மிதுன் அதிலிருந்து மீண்டு வர திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், அரசியலில் குதிக்கப்போவதாக கூறி அதிரடி காட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தி ஆதாரத்துடன் ட்விட் ஒன்றை போட்டுள்ளார். அதாவது, (State Director of Anti-corruption committee) லஞ்ச ஒழிப்பு துறையில் அதிகாரியாக மீரா மிதுன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் அலுவலகத்திலிருந்து இவருக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைத்திருந்த கடிதத்தை பதிவிட்டு, இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. நான் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்” என கூறியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் மீராவுக்கு இப்படி ஒரு வாழ்வா..? என வாய்பிளந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *